Categories
சினிமா தமிழ் சினிமா

செம மார்டன் உடையில் ‘அன்பே வா’ சீரியல் நடிகை… ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்…!!!

அன்பே வா சீரியல் நடிகை டெல்னா டேவிஸ் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . தற்போது ரோஜா, கண்ணான கண்ணே, பாண்டவர் இல்லம் உள்ளிட்ட பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் அன்பே வா சீரியல் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்படும் சீரியலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடிகை டெல்னா டேவிஸ் நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் டெல்னா டேவிஸ் செம மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. ரசிகர்களை கவர்ந்த இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |