Categories
உலக செய்திகள்

ஒரு நாளில் ஒரு மில்லியனுக்கு அதிகமான மக்களுக்கு தடுப்பூசி…. சாதனை படைத்த ஐரோப்பிய நாடு….!!

ஜெர்மனியில் ஒரே நாளில் ஒரு மில்லியனுக்கு அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனியிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்நிலையில் ஜெர்மனியில் கடந்த புதன்கிழமை ஒரே நாளில் 10,88,952  பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த மார்ச் 22ஆம் தேதி ஒரேநாளில் பேருக்கு பிரிட்டனில் 8,74,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது ஜெர்மனி பிரிட்டனை விட அதிக தடுப்பூசிகளை ஒரே நாளில் மக்களுக்கு செலுத்தியுள்ளது. மேலும் ஜெர்மனி மொத்த மக்கள் தொகையில் 1% அதிகமானோருக்கு ஒரே நாளில் தடுப்பூசி போட்டுள்ளது. இதனிடையே அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மட்டுமே ஒரே நாளில் அதிக தடுப்பூசிகளை போட்டுள்ளன.  இந்நிலையில் ஜெர்மனி மொத்த மக்கள் தொகையில் 25.9 சதவீதம் பேருக்கு முதல் தடுப்பூசியை போட்டுள்ளது.

Categories

Tech |