லண்டனில் பொதுமுடக்கத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய 9 பேரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் Hyde Park கிற்கு அருகில் பொதுமுடக்கம் மற்றும் கொரோனா விதிமுறைகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. இதனை தடுக்க முயற்சித்த காவல்துறையினர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பாட்டில்களை தூக்கி வீசியுள்ளனர். இதனால் பல காவல்துறை அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக இணையதளங்களில் வெளியான ஒரு புகைப்படத்தில், ஒரு காவல்துறை அதிகாரியின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இந்நிலையில் Scotland Yard காவல்துறையினர் மேலும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தில் இருப்பவர்களை தேடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அன்றும் Hyde Park கிற்கு அருகில் போராட்டம் நடந்துள்ளது. இதில் சுமார் 100க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். அவர்களை காவல்துறையினர் கலைக்க முயற்சித்தபோது போராட்டக்காரர்கள் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இதில் காவல்துறையினர் 14 பேர் காயமடைந்து, அதில் 5 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளதாகவும், இந்த வன்முறையில் ஈடுபட்ட 9 நபர்களை தேடி வருவதாக காவல்துறையினர் புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றனர்.