Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஸ்டாலினுக்கு பொய் சொல்வது வாடிக்கை” OPS விமர்சனம் …!!

ஸ்டாலின் தொடர்ந்து பொய் குற்றச்சாட்டை முன்வைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்று ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.

நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதாரங்களை ஆய்வு செய்து , நிவாரண பணிகளை மேற்கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசு மழை வெள்ளம் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில் ,

Image result for o.panneerselvam

நீலகிரியில் அதிகபட்ச மழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்ததைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய் துறை அமைச்சர் மற்றும் தேசிய மீட்புக்குழு அதிகாரிகள் அனுப்பி வைத்து, அங்கேயே  இருந்து நிவாரணப் பணிகளையும் , மீட்பு பணிகளையும் தேவையான உதவிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டார்.அரசியல் காரணத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து பொய் குற்றச்சாட்டை முன்வைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்று விமர்சித்துள்ளார்.

Categories

Tech |