Categories
உலக செய்திகள்

திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்…. 108 பேர் மருத்துவமனையில் அனுமதி…. 44 பேர் பலி….!!

இஸ்ரேலில் நடந்த திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலில் கொரோனா குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து மத திருவிழாவிற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் மெரான் மலையின் அடிவாரத்தில் நடைப்பெற்ற Lag B’Omer திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 103 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 38 பேரில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 44 பேர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைதொடர்ந்து காவல்துறையினர் மக்களை பேருந்து மூலம் அப்பகுதியில் இருந்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில் இது ஒரு பெரிய விபத்து என்றும் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நபர்களுக்காக கூட்டுப் பிரார்த்தனை நடந்து வருவதாகவும் கூறினார்.

Categories

Tech |