Categories
உலக செய்திகள்

மீண்டும் பிரிட்டனில் கொரோனா அதிகரிப்பு…. இந்தப் பகுதிகளில் மட்டும்…. வெளியான முழு தகவல்….!!

இங்கிலாந்தில் குறிப்பிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் பக்கவிளைவுகளை யோசிக்காமல் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக் கொண்டதன் பயனாக கொரோனா முற்றிலுமாக குறைந்திருந்தது. மேலும் பலி எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் சில பகுதிகள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதில் 100000 பேரில் North Yorkshire Selby பகுதியில் கடந்த வாரங்களில் பரவல்  46.3 விகிதமாக  இருந்தது தற்போது 109.2 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்துLancashire-ல் உள்ள Hyndburn-ல் 60.5  சதவீதம் பேர் பாதிக்கபட்டுள்ளனர். இந்நிலையில் Chiltern பகுதியில் 3.1-ஆக இருந்த பரவல் தற்போது 25.0 ஆக அதிகாரித்துள்ளது. இதனிடையே  Doncaster பகுதியில் 65.7 இருந்தது 73.7 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.

Categories

Tech |