Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 5 வருடம் தான் ஆகுது..! இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… போலீஸ் தீவிர விசாரணை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டையை அடுத்த மரவனத்தம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி (25) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விஜயலட்சுமி மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வி.களத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |