Categories
உலக செய்திகள்

ஆய்வுகளில் வெளிவந்த தகவல்…. கொரோனா தடுப்பூசிகள் இவர்களை தான் அதிகம் பாதித்துள்ளது…. அறிவிப்பு வெளியிட்ட MHRA நிறுவனம்….!!

கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் ரத்த உறைவு பிரச்சனையால் இந்த வயதினர் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை MHRA  நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பூசிகள் பல ரத்தக்கட்டி பிரச்சினைகளை உருவாக்குகிறது என பல ஆய்வு முடிவுகளில் தெரியவந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்பு ஒழுங்குமுறை நிறுவனம் MHRA  ஆக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் அரிதான ரத்த கட்டிகள் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளானவர்கள் 25% பேர் 40 வயதிற்குட்பட்டவர்கள் என்றும் 60 வயதிற்குட்பட்டவர்கள் மூன்றில் இரண்டு பங்கு  பாதிக்கப்பட்டுள்ளனர். எனவும் தெரிவித்துள்ளது. இதனிடையே கடந்த ஏப்ரல் 21 வரை பிளேட்லெட் ரத்த உறவில் 209 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 47 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |