இந்தியா கொரோனாவால் போராடி வரும் நிலையில் தேவையான உதவிகளை செய்ய 40 நாடுகள் முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் உத்திரபிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதால் வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு தூதர்களை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் இந்தியாவுக்கு 40 நாடுகள் உதவ முன்வந்துள்ளது என்றும் பல நாடுகள் தடுப்பூசிகள், ஆக்சிஜன் ஆகியவற்றை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது என்றும் மேலும் பல நாடுகள் உதவ முன்வரும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.