Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் கொரோனா பரப்பு விகிதத்தை குறிக்கும் R எண் அதிகரிப்பு.. இங்கிலாந்து சுகாதாரத்துறை அறிவிப்பு..!!

பிரிட்டனில் கொரோனா பரப்பும் விகிதத்தை குறிக்கக்கூடிய R எண் மதிப்பு அதிகரித்திருப்பதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தீவிரமாகி நேருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் கடந்த வாரத்தில் R எண் 0.8 லிருந்து 1.0 வரை இருந்தது. அதாவது சராசரியாக கொரோனா ஏற்பட்ட ஒவ்வொரு பத்து நபர்களும் 8 லிருந்து 10 நபர்களுக்கு தொற்றை ஏற்படுத்தினார்கள் என்று அர்த்தம்.

அது தற்போது 0.8 லிருந்து 1.1 ஆக அதிகரித்திருக்கிறது. இதனை இங்கிலாந்து பொது சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. இதனால் சராசரியாக கொரோனா ஏற்பட்ட ஒவ்வொரு பத்து நபர்களும் 8 லிருந்து 11 நபர்களுக்கு தொற்றை ஏற்படுத்துவார்கள்.

Categories

Tech |