Categories
Uncategorized உலக செய்திகள்

பிரிட்டனில் கொரோனா அதிகரிக்கும்…. ஒரு நபர் 8 முதல் 11 பேருக்கு பரப்புவார்…. உயர்ந்த R-எண் மதிப்பு…..!!

பிரிட்டனின் கொரோனா பரவவதை குறிக்கும் R எண் அதிகரித்துள்ளதாக இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் R எண் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

R எண் என்பது ஒரு நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் சராசரியாக அவர் எத்தனை நபருக்கு பரப்புவார்கள் என்பதை என்ற எண்ணிக்கையை குறிக்கும். மேலும் R எண் 1-க்கு அதிகமாக இருக்கும்போது தொற்று அதிவேகமாக பரவும் என்றும் ஆனால் ஒன்றுக்கு கீழே இருக்கும் போது தொற்று குறையும் என்றும் அர்த்தமாகும்.

இந்நிலையில் இங்கிலாந்து பொது சுகாதாரத் துறை கூறுகையில் பிரிட்டனில் கடந்த வாரம் 0.8 ஆக இருந்த R எண் தற்போது 1.20 அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் 8 முதல் 11 பேர் பேருக்கு கொரோனாவை பரப்புவார்கள் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |