Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை லாஸ்லியாவின் ‘பிரண்ட்ஷிப்’… மேக்கிங் வீடியோ புரோமோவை வெளியிட்ட படக்குழு…!!!

நடிகை லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் படத்தின் மேக்கிங் வீடியோ புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் லாஸ்லியா . இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த லாஸ்லியாவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது . அந்த வகையில் ஹர்பஜன்சிங் ஹீரோவாக நடித்துள்ள பிரண்ட்ஷிப் படத்தில் லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், சதீஷ், குக் வித் கோமாளி பாலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் அசத்தலான டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் பிரண்ட்ஷிப் படத்தின் மேக்கிங் வீடியோ புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |