Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவினர் வெற்றிமாலை சூட தயாராகுங்கள் – கஸ்துரி டுவிட்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று பல்வேறு சேனல்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியானது..

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், கடமைகள் அழைக்கின்றன. கண்மணிகளே வெற்றி மாலை சூட தயாராகுங்கள். நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். இரட்டை இலை என்றென்றும் வெல்லும். வரலாறு வியக்கும் வகையில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தகவல் வருகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இவற்றை பகிர்ந்த நடிகை கஸ்தூரி, “அதிமுக தான் வெற்றி பெற வேண்டுமென விரும்புகிறேன்” என்று டுவிட் செய்துள்ளார்.

Categories

Tech |