டெம்போவில் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல் துறையினருக்கு அப்பகுதியில் இருக்கும் பள்ளிவாசல் அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் டெம்போ வேனில் 3 பேர் ரேஷன் அரிசியை ஏற்றி கொண்டிருந்ததை பார்த்து உள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் டெம்போவை சோதனை செய்தபோது அதை மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன் பின் காவல்துறையினர் அந்த மூன்று பேரையும் பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள் காந்திநகர் தெருவில் வசித்துவரும் ரபிக், முகமது ரபிக் மற்றும் பசிபுல்லா என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் 3 பேரும் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயற்சி செய்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் 4 1/2 டன் ரேஷன் அரிசி மற்றும் டெம்போ வேன் போன்றவற்றை பறிமுதல் செய்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.