சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 513 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை தடுப்பதற்காக அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 513 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்து 855 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 530 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.