இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை தகவல் கூறியுள்ளது. நாளொன்றுக்கு 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஆக்சிஜனை உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.