நடிகர் சித்தார்த் படங்களில் மட்டும் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுபவராக இல்லாமல் நிஜத்திலும் ஒரு ஹீரோவாக இருக்கிறார். அந்தவகையில் உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக் குறையை சுட்டிக் காட்டி சாமானியனாக இருந்தாலும் சரி, சாமியாராக இருந்தாலும் சரி, தலைவராக இருந்தாலும் சரி பொய் சொன்னால் கன்னத்தில் அறை விழும் என்று நடிகர் சித்தார்த் கூறியிருந்தார்.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில், எனது போன் நம்பரை தமிழக பாஜக ஐடி பிரிவு லீக் செய்ததால், கடந்த 24 மணி நேரமாக ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் அழைப்பு வருவதாகவும், தனது குடும்பத்தினரை ஆபாசமாக பேசுவதாகவும் குற்றம் சாட்டிய சித்தார்த்த நான் பேசுவதை யாரும் நிறுத்த முடியாது என்று சூளுரைத்துள்ளார். மேலும் அவர்கள் பேசிய கால் ரெக்கார்டுகளையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளேன் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து சித்தார்த்தின் இந்த பதிவுக்கு பலர் ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், சித்தார்த்துக்கு ஆதரவாக இந்திய அளவில் #IStandWithSiddharth என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில் நடிகை பார்வதி, “பின்வாங்காதீர்கள் சித்தார்த். உங்கள் பின்னால் ஒரு படையே இருக்கிறோம் என்று தெரிவித்தார். இவரை தொடர்ந்து இயக்குனர் பொன்ராம் கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு என சித்தார்த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.