Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விமான நிலைய சோதனையில்… காவலாளியிடம் இருந்த தோட்டா… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கோவை விமான நிலையத்தில் தனியார் நிறுவன காவலாளி துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஜோகிந்தர் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருந்த ஜோகிந்தர் தமிழக சட்டமன்ற தேர்தலை யொட்டி அதனை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து  டெல்லியில் நடைபெறும் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜோகிந்தர் கோவை விமான நிலையத்திற்கு விமானத்தில் பயணம் செய்ய சென்றுள்ளார்.

இதனையடுத்து விமான நிலையத்தில் சோதனை செய்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அந்த பையில் துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் அவரை அதிகாரிகள் பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் ஜோகிந்தர் அவசரமாக கிளம்பும் போது பையில் வைத்திருந்த துப்பாக்கி தோட்டாக்களை கவனிக்க மறந்து விட்டதாகவும், ஏற்கனவே தன்னிடம் துப்பாக்கி உரிமம் உள்ளது எனவும் கூறியுள்ளார். அதன் பின் அவரிடம் இருந்த துப்பாக்கி உரிமங்களை காவல்துறையினர் சரி பார்த்து அவரிடம் இருந்த தோட்டாக்களை பறிமுதல் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |