16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விட்டனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள திம்மசமுத்திரம் பகுதியில் விக்னேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் குமார் அதே பகுதில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். அதன் பின்பு இருவரும் தனித் தனியாக அவரவர் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனை அடுத்து சில நாட்களுக்கு முன்பு அச்சிறுமி கர்ப்பம் ஆனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பெயரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை பரிசோதைனைக்காக அழைத்து சென்ற போது சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து காவல் துறையினர் விக்னேஷ் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.