உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதிய வசதிகளும் காணப்படவில்லை.
அந்த வகையில் இன்றைய நிலவரப்படி உலக நாடு முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்து அவர்களின் எண்ணிக்கை 14,84 கோடியை எட்டியுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,10,98,853 ஆக உயர்ந்துள்ளது. தற்போது குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 12,84,25,203 ஆக உள்ளது.
இந்த கொடிய வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3178 162 ஆகும். இதனிடையில் மருத்துவமனைகளில் 19,495,488 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இவர்களில் 111,622 பேர்களின் நிலைமை கவலைக்கிடமாக ஆக தகவல் வெளியாகியிருக்கிறது.