Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘லட்டு மாதிரி கிடைச்ச சான்ஸ்’…! தவறவிட்ட சஞ்சு சாம்சன்… வெளியான வீடியோ …!!!

நேற்று மும்பைக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் பந்தை தவறவிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

நேற்று டெல்லியில் நடைபெற்ற 24 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. குறிப்பாக நேற்று நடந்த போட்டியில் ,ராஜஸ்தான் அணி பீல்டிங்கில் களமிறங்கியது. அப்போது 2 வது ஓவரில் உனத்கட்  பந்து வீசினார்.

இந்நிலையில் அந்த ஓவரின் 5-வது பந்தை  ரோகித் சர்மா எதிர்கொண்டபோது, அவருடைய            பேட்டின் நுனியில் பட்டு ,கீப்பரிடம் சென்றது. ஆனால் அந்த பந்தை விக்கெட் கீப்பராக இருந்த  சஞ்சு சாம்சன் தவறிவிட்டார். இதனால் பந்தை தவற விட்டதால் , உனத்கட் அதிர்ச்சி அடைந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

https://twitter.com/pant_fc/status/1387743486271647745

Categories

Tech |