இஸ்ரேலில் விடுமுறை கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றபோது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் வடக்கு பகுதியில் மவுண்ட் மெரான் என்னும் இடத்தில் விடுமுறை கொண்டாட்டம் என்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டுள்ளனர். அப்பொழுது திடீரென கூட்ட நெரிசல் அதிகமானதினால் இடிபாடுகளில் சிக்கி மூச்சுத்திணறி 20 க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 6 ஹெலிகாப்டர் 20 மேற்பட்டா ஆம்புலன்ஸ்கள் உடனடியாக வந்து அங்கிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து காயமடைந்தவர்கள் அனைவரையும் மீட்பு குழுவினர் மீட்டு சபீத் பகுதியில் உள்ள ஜிவ் மருத்துவமனைக்கும் மற்றும் நஹாரியா பகுதியில் உள்ள கலிலீ மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர் . இதனிடையில் காயமடைந்தவர்களில் 20 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த திடீர் கூட்ட நெரிசல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.