தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனையடுத்து வாக்குபெட்டிகள் அனைத்தும் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில் மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் செல்போன், கேமரா, பேனாக்கள், பாட்டில்கள், டிபன் பாக்ஸ், குடைகள், வேதிப்பொருட்கள், தின்பண்டம் மற்றும் தீக்குச்சிகள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மையங்களில் பாஸ் வைத்திருப்போர் தவிர வேறு ஆட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.