Categories
லைப் ஸ்டைல்

முகப்பரு, கால் ஆணி, பித்த வெடிப்பு நீங்க… இந்த ஒரு இலை போதும்….!!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.

அதன்படி முகப்பரு, கால் ஆணி மற்றும் பித்த வெடிப்புகள் நீங்க அம்மான் பச்சரிசி இலை அருமருந்தாக அமைகிறது. அம்மான் பச்சரிசி பாலை முகத்தில் தடவினால் முகப்பரு குணமாகும். மூன்றே நாட்களில் முகத்தில் உள்ள பருக்கள் அனைத்தும் உதிர்ந்து விடும். கால் ஆணி பித்தவெடிப்பு மறைய இதன் பாலை பூசலாம். தாய்ப்பால் சுரப்பு குறைந்தால் தாய்மார்கள் இதன் செடிகளை அரைத்து எலுமிச்சைப்பழ அளவு எடுத்து, பாலுடன் கலந்து காலை மாலை சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.

Categories

Tech |