Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘ஆர்சிபி அணியை துவம்சம் செய்த பஞ்சாப்’ …! 34 ரன்கள் வித்தியாசத்தில்… பஞ்சாப் அபார வெற்றி…!!!

ராகுல், ஹர்பிரீத் அதிரடி ஆட்டத்தால் 34 ரன்கள் வித்தியாசத்தில் ,ஆர்சிபி அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி பெற்றது .

நேற்று அகமதாபாத்தில்  நடைபெற்ற ,26 வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்  மோதின .இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி , பீல்டிங்கை  தேர்வு செய்ததால், பஞ்சாப் அணி பேட்டிங்கில் களமிறங்கியது.தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், பிரப்சிம்ரன் சிங்  ஜோடி களமிறங்கினர் .இதில் பிரப்சிம்ரன் 7 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்து கிறிஸ் கெயில் , 24  பந்துகளில்  6 பவுண்டரி , 2 சிக்ஸர்கள் அடித்து 46 ரன்களில் வெளியேறினார் . அடுத்தாக களமிறங்கிய  பூரன் 0, தீபக் ஹூடா  5 ரன் மற்றும்  ஷாருக்கான் 0 ஆகியோர் ஆட்டமிழந்தனர்  .

இறுதியாக களமிறங்கிய ஹர்பிரீத்,ராகுலுடன் ஜோடி சேர்ந்தார் .இதில் கடைசி ஓவரில் இருவரும் இணைத்து ,22 ரன்களை குவித்தனர் . இறுதிவரை அட்டமிழக்காமல் ஆடிய ராகுல் 91 ரன்கள் மற்றும் ஹர்பிரீத் 25 ரன்கள் எடுக்க ,இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவரில்  5 விக்கெட்டை இழந்து 179 ரன்களை குவித்துள்ளது .அடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி 180 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது . தொடக்க வீரர்களாக விராட் கோலி – தேவ்தத் படிக்கல் ஜோடி களமிறங்கினர்.

பஞ்சாப் அணியின் பவுலிங் ,  சிறப்பாக அமைந்ததால் ஆர்சிபி வீரர்கள் , அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தன. இதில் தொடக்க வீரரான படிக்கல் 7 ரன்னில் வெளியேறினார். அதிகபட்சமாக விராட் கோலி 35 ரன்கள் , ரஜத் பட்டிதார் 31 ரன்களும் மற்றும் ஹர்ஷல் படேல் 31 ரன்கள்  எடுத்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை கைப்பற்றியது.

Categories

Tech |