Categories
தேசிய செய்திகள்

BREAKING: பெரும் பரபரப்பு…. அடுத்தடுத்து மரணம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி செய்தி….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் குஜராத் மாநிலம் பரூச்சியில் உள்ள பட்டேல் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ விபத்தில் 12 கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக பெரும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் காயமடைந்த மற்ற கொரோனா நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தீ விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இவ்வாறு தொடர்ந்து பல மருத்துவமனைகளில் தீவிபத்து ஏற்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

Categories

Tech |