நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன.
அதன்படி பாதாம் பருப்பில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. நினைவாற்றலை அதிகரிக்க மற்றும் நரம்புகளைப் பலப்படுத்தி கொள்ள தினமும் இரவில் 12 பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும். எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் வாரத்தில் 2 முறை ஐந்தைந்து பாதாம் பருப்புகளை எடுத்து கொண்டால் உடல் எடை குறைப்பிற்கு 50% உதவும்.