Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்ன ஆச்சுனே தெரியல..! பரிதாபமாக இறந்த உயிர்கள்… மருத்துவர்கள் பரிசோதனை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பகுதியில் மூன்று மாடுகள் மர்ம நோய் தாக்கி பரிதாபமாக பலியாகின.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தெப்பக்குளத்துப்பட்டியில் விவசாயியான சக்திவேல் வசித்து வருகிறார். இவர் வளர்த்து வந்த 2 மாடுகள் மர்ம நோய் தாக்கியதால் காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் அதே பகுதியில் வசித்து வரும் முத்துசாமி என்பவருடைய பசுமாடுக்கும் காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு பசு மாடுகளுக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த மூன்று பசு மாடுகளும் பரிதாபமாக இறந்து விட்டது. ஆனால் அவை இறந்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. எனவே அவைகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவற்றை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாக கூறியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கால்நடை மருத்துவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |