புதுக்கோட்டை மாவட்டத்தில் லாரியின் அடிப்பகுதியில் சிக்கிய கன்றுக்குட்டியை உயிருடன் எந்த காயமும் இன்றி பொது மக்கள் மீட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீழ இரண்டாம் சாலையில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியின் அடிப்பகுதியில் கன்றுக்குட்டி சிக்கி கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த தாய்ப்பசு செய்வதறியாமல் லாரியை சுற்றி சுற்றி வந்து கொண்டே இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கன்றுக்குட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்ட போது அவர்களை தாய்ப் பசு முட்ட வந்ததுள்ளது.
இதனால் அவர்கள் அலறி அடித்து ஓடினர். இதனையடுத்து தாய்ப் பசுவை சற்று தூரம் விரட்டி விட்டு கன்றுக்குட்டியை மீட்கும் பணியில் பொது மக்கள் ஈடுபட்டனர். பின்னர் கால்களை மடக்கி வெளியே இழுத்து கன்றுக்குட்டியை உயிருடன் எந்த காயமும் இன்றி காப்பாற்றியுள்ளனர். பின்பு குட்டி ஓடி சென்று தாய்ப் பசு அருகே நின்ற பின் தாய்ப் பசு தழுவி அனைத்து கொண்டு அழைத்து சென்றது. இந்த தாய் பிள்ளை பாசப் போராட்ட சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய செய்தது.