Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

2 மாதம் ஆகிருச்சு… இன்னும் எந்த முயற்சியும் எடுக்கல…. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்மாற்றியை சரி செய்து தரக்கோரி பொதுமக்கள் துணை மின் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள எட்டிச்சேரி, சிறுகவயல் ஆகிய பகுதிகளில் மின் மாற்றிகள் பழுதாகி இரண்டு மாதங்கள் ஆகியுள்ளன. இதனால் அப்பகுதி பொதுமக்கள்  நாகுடி துணை மின் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். அனால் அதிகாரிகள் இதுவரை எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின்மாற்றியிலுள்ள பழுதை சரி செய்து தரக்கோரி நாகுடி மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து துணை மின் நிலைய உதவிபொறியாளர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சரி செய்து தரப்படும் என்று கூறிய பின்பு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |