சென்னை நோக்கி வந்த தனியார் பேருந்து திடீரென ஆற்றுக்குள் விழுந்ததால் பெண் உட்பட 5 பேரும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் இருந்து நேற்று காலை சரியாக 10.30 மணியளவில் ஒரு தனியார் பேருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளது. அந்தப் பேருந்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த பேருந்து பட்டுக்கோட்டையை அடுத்துள்ள சூரப்பள்ளம் அருகில் உள்ள ஆற்று பாலத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென பஸ் ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த ஐந்து பேரும் ஆற்றுக்குள் விழுந்தனர். இருப்பினும் ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் இல்லாததால் அவர்கள் உயிர் பிழைப்பதற்கு சாதகமாக இருந்தது. இதனால் அவர்கள் சிறு சிறு காயங்களுடன் தப்பித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினரும் காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அதன்பின் பேருந்துக்குள் இருந்த 5 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு 108 ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.