Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடத்தப்பட்ட 17 வயதுடைய மாணவி…. டிப்ளமோ என்ஜினீயரின் கேவலமான செயல்…. கைது செய்த காவல்துறை….!!

மாணவியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் காவல்துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆயக்காரன்புலம் கிராமத்தில் கலியமூர்த்தி என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்து அப்பகுதியில் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய ஒரு மாணவியிடம் பழகி வந்துள்ளார்.

பின்னர் அந்த மாணவியிடம் அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி நாச்சிகுளம் பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாணவியின் பெற்றோர் வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் கலியமூர்த்தியை போக்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |