மறைந்த நடிகர் செல்லத்துரைக்கு ஹிப்ஹாப் ஆதி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான கத்தி, மாரி, நட்பேதுணை உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் செல்லதுரை. 84 வயதான இவர் நேற்று மாலை உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து திரை பிரபலங்களும், ரசிகர்களும் செல்லதுரை மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல முன்னணி நடிகர் ஹிப்ஹாப் ஆதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்லதுரையுடன் இருக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் அதில், ‘நட்பே துணை’ செட்களில் நாங்கள் தினமும் தாத்தாவுடன் மிகவும் வேடிக்கையாக இருந்தோம். நான் இருக்க வரைக்கும் நடிச்சிட்டே இருக்கணும் என்று அடிக்கடி சொல்வார்.
சிங்கிள் பசங்க படப்பிடிப்பின்போது அவர் இரவு தாமதமாக சென்றபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டது. நாங்கள் அனைவரும் சோர்வாக இருப்போம். ஆனால் அவர் மிகவும் உற்சாகமானவர். மேலும் அவர் நடிப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். RIP செல்லத்துரை தாத்தா என்று பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/COSNdnpDgPT/?igshid=yzf8w2pz96ef