புதுக்கோட்டை மாவட்டத்தில் காதலித்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் திருமணம் செய்ய மறுத்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு வடக்குப்பட்டி பகுதியில் சந்திரபாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ராம்கி என்ற மகன் இருக்கிறான். இவர் அப்பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ராம்கி அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஆனால் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண் ராம்கி வீட்டிற்கு சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு ராம்கி திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் அந்த பெண் ஆலங்குடியிலுள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் ராம்கி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.