Categories
தேசிய செய்திகள்

வெறும் 4 கிலோ மீட்டருக்கு… ரூபாய் 10,000… அதிகரிக்கும் கொரோனா கொள்ளை..!!

டெல்லியில் வெறும் 4 கிலோ மீட்டர் தூரம் செல்வதற்காக ஆம்புலன்ஸ்க்கு பத்தாயிரம் வசூலித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. மேலும் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் போன்றவற்றில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க டெல்லியில் வெறும் நான்கு கிலோமீட்டர் தூரம் செல்வதற்கு தனியார் ஆம்புலன்ஸ் ஓன்று ரூபாய் 10,000 வசூலித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவை பொதுமக்கள் பீதியாக பார்க்கும்போது தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பாக இவற்றை பார்க்கின்றன. ஆம்புலன்ஸ் கொடுத்தால் கட்டண சீட்டை ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ரா தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து உலகம் நம்மை உற்று நோக்குகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |