இந்தியில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பிக்ரம்ஜித் கன்வர்பால் இன்று கொரோனாவால் உயிரிழந்தார்.
தமிழில் அஞ்சான், இந்தியில் 2 ஸ்டார்,jab tak hai jaan, joker உள்ளிட்ட படங்களில் நடித்து மிகப் பிரபலமானவர் பிக்ரம்ஜித் கன்வர்பால். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு வயது 52. கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.