ஹஜ் பயணம் செய்ய 2 முறை தடுப்பூசி அவசியம் என்று இந்திய ஹஜ் குழு அறிவித்துள்ளது.
தற்போது இஸ்லாமிய மதத்தினர் அனைவரும் ரமலான் நோன்பு மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் சவுதி அரேபியாவில் உள்ள புனித தளத்திற்கு ஹஜ் பயணம் மேற்கொள்வது வழக்கம். அதேபோல் இந்த வருடம் சவுதி அரேபியாவிற்கு வருகைதரும் இந்தியாவை சேர்ந்த ஹஜ் புனித பயணிகள் அதற்கு முன் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என இந்தியா ஹஜ் குழு அறிவித்துள்ளது. ஹஜ் பயணத்திற்கு ஜூன் மாதம் முதல் விமானங்கள் இயங்கும். பயணத்தில் இடையூறு ஏற்படாதவாறு இருக்க பயணிகள் முன்கூட்டியே தடுப்பூசி போட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.