Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி கனி திருமணத்தின் போது எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான அழகிய புகைப்படம்…!!!

குக் வித் கோமாளி கனி திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் கனி. இவர் இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார் . கனி முதலில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தார். இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் .

மேலும் காரக்குழம்பு கனி என மற்றவர்கள் கிண்டல் செய்தாலும் இறுதிப் போட்டியில் சிறப்பாக சமைத்து டைட்டிலை வென்று அசத்தினார். இந்நிலையில் கனியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. கனி பிரபல இயக்குனர் திருவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர் .

Categories

Tech |