Categories
மாநில செய்திகள்

50 சதவீத வாடிக்கையாளர்களுடன் அனுமதி வேண்டும்… வணிகர் சங்கம் கோரிக்கை..!!

50 சதவீத வாடிக்கையாளர்களுடன் அனுமதி வேண்டும் என்று வணிகர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. பெரிய வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் உடன் அனைத்து கடைகளிலும் வணிகம் நடத்த அனுமதிக்க வேண்டும் என வணிகர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. மதுபானம் வாங்கும் போது ஏற்படாத கொரோனா, அத்தியாவசிய பொருள்களை வாங்கும் போது ஏற்படும் என்பது ஏற்புடையது அல்ல. 3000 சதுர அடிக்குமேல் உள்ள கடைகளை மூடினால் சிறிய கடைகளில் நெரிசல் ஏற்படும் என்பதை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை என கூறியுள்ளது.

Categories

Tech |