உலகக் கோப்பை 20 ஓவர் போட்டி வரும் அக்டோபர் ,நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது.
16 அணிகள் பங்கேற்க உள்ள உலக கோப்பை 20 ஓவர் போட்டி ,இந்தியாவில் வருகின்ற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்தியாவில் 9 நகரங்களில் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது இந்தியாவில் , கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் சில நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன. இந்நிலையில் இந்தியாவில் உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுமா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி நேற்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுமேலாளரும் , இயக்குனருமான தீரஜ் மல்ஹோத்ரா தகவலை தெரிவித்து உள்ளார் .
அதில் இந்தியாவில் ஒருவேளை போட்டி நடத்த முடியாத நிலை,ஏற்பட்டால் அதற்கு மாற்றாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ,போட்டி நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடந்தாலும் ,போட்டி நடத்துவதற்கான உரிமை இந்தியாவிடம் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது பற்றி இந்திய கிரிக்கெட் வாரியம் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, உலகக்கோப்பை போட்டிக்கு 5 மாதங்கள் உள்ள நிலையில், போட்டி கண்டிப்பாக நடைபெறும். தற்போது மக்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டு வருகின்றன. எனவே உலக கோப்பை போட்டி உறுதியாக நடைபெறும், என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும், போட்டிக்காக திட்டமிடப்பட்ட 9 நகரங்களில் இருந்து 5 ஆக குறைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.