Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளியூர் சென்ற குடும்பம்…. திரும்பியபோது காத்திருந்த அதிர்ச்சி…. வலைவீசிய போலீசார்….!!

வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள மேல பொன்னகரம் கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் சங்கரபாண்டி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் வெளியூர் சென்று உள்ளார். பின்னர் அவர் நேற்று காலை வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஐந்து பவுன் நகை திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சங்கரபாண்டி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி சில தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 5 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |