ரோஜா சீரியல் நடிகர் சிப்புவுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியல் மற்ற தொலைக்காட்சி சீரியல்களை பின்னுக்கு தள்ளி டி.ஆர்.பி யில் முதலிடத்தில் இருந்து வருகிறது . இந்த சீரியலில் சிப்பு சூரியன் கதாநாயகனாகவும், பிரியங்கா நல்காரி கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சிப்புவுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதாவது நடிகர் சிப்புவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட நபர் ஒருவர் ‘விரைவில் மீண்டு வாருங்கள் அண்ணா’ என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.