Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையின் புதிய படம்…. படப்பிடிப்பு பாதியில் ரத்து…. இதுதான் காரணமா?

பிரபல நடிகையின் புதிய படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

தமிழ் சினிமாவில் வெளியான சூதுகவ்வும் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இவர் தற்போது பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மகன் லியோ சிவகுமார் ஹீரோவாக அறிமுகமாக உள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

அழகிய கண்ணே

‘அழகிய கண்ணே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தினை விஜய குமார் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள கோணப்பட்டி கிராமத்தில் 100 பேர் கொண்ட கிராம மக்களுடன் நடைபெற்றது. இதை தவிர படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பதற்கும் கிராம மக்கள் பலர் அந்த இடத்தில் கூடியிருந்தனர்.

இதனை அறிந்த கொரோனா தடுப்பு குழுவினர் படப்பிடிப்புத் தளத்திற்கு உடனடியாக சென்று அங்கு விதிமுறைகளை பின்பற்றாததால் படப்பிடிப்பு குழுவினருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் மேற்கொண்டு படப்பிடிப்பை நடத்தவும் அனுமதி அளிக்கவில்லை. இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் ரத்து செய்யப்பட்டது.

Categories

Tech |