பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 34 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,627 ஆக அதிகரித்துள்ளது. அதில் ஏற்கனவே 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,425 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 178 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 814 பேருக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது என்று மருத்துவ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.