Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு…சம்பளத்தின் ஒரு பகுதியை… வழங்கும் நிக்கோலஸ் பூரன்…!!!

இந்தியாவில் கொரோனா  தொற்றால் பாதித்தவர்களுக்கு ,உதவி செய்ய ஐபிஎல் சம்பளத்தின் ஒரு பகுதியை  வழங்குவதாக ,நிக்கோலஸ் பூரன் அறிவித்தார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ம் அலை , நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் நோயினால் அவதிப்பட்டும், ஆக்சிசன் தட்டுப்பாட்டாலும் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்வதற்காக ஐபிஎல் போட்டியில், பங்கு பெற்றுள்ள வீரர்கள் உதவ முன்வந்துள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் , கொரோனா சிகிச்சைக்கு நிதி உதவி அளித்துள்ளன.

சில தினங்களுக்கு முன் கொல்கத்தா அணியில்  இடம்பெற்றுள்ள, வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா முன்னாள் பந்துவீச்சாளர்  பிரெட்லீ ஆகியோர் நன்கொடை வழங்கியுள்ளனர். இந்நிலையில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள நிக்கோலஸ் பூரன் ,தான் வாங்கும் ஐபிஎல் சம்பளத்தின் ஒரு பகுதியை , கொரோனா சிகிச்சை நிவாரணமாக  வழங்குவதாக நேற்று , தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்  . இதைத்தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகமும், இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உதவும் வகையில் ஆக்சிசன் செறிவூட்டிகளை வழங்குவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரரான ஷிகர் தவான் , கொரோன பாதிப்பிற்கு ரூபாய் 20 லட்சம் நிதியுதவி வழங்குவதாகவும் , ஐபிஎல் போட்டியில் விருதுகளின் மூலமாக கிடைக்கும், அனைத்து தொகையையும் சிகிச்சைக்கு கொடுப்பதாகவும் தெரிவித்தார் . இவர்களைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான உனட்கட், ஐபிஎல் போட்டியில் பெரும் சம்பளத்தில், 10 சதவீதத்தை கொரோனா  சிகிச்சைக்கு நன்கொடையாக வழங்குவதாக கூறியுள்ளார்.

Categories

Tech |