சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 நபர்கள் காவல் துறையினரால் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் சம்மட்டிபுரம் கிராமத்தில் வெண்ணிலா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்வதற்காக வெளியே வந்துள்ளார். அந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் வெண்ணிலாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து வெண்ணிலா அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் சம்மட்டிபுரம் பகுதியில் பாலா, ரமேஷ் என்பவர் வெண்ணிலாவின் நகையை திருடியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.