Categories
சினிமா தமிழ் சினிமா

50வது பிறந்த நாள் கொண்டாடும் தல அஜித்…. டி.இமான் வாழ்த்து…!!!

இசையமைப்பாளர் டி இமான் தல அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இன்று மே 1ஆம் தேதி அஜீத் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் ரசிகர்களும், திரை பிரபலங்களும் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் டி.இமான் தல அஜித்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது, “எங்கள் அன்பான அஜித் ஐயாவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களது மகிழ்ச்சியையும், அமைதியையும் மட்டுமே விரும்புகிறேன்.சர்வ வல்லமையுள்ள கடவுள் தொடர்ந்து உங்கள் விருப்பமான ஆசீர்வாதங்களை உங்கள் மீது ஊற்றட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |