Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முந்தி செல்லனுமுன்னு நினைச்ச… சட்டென நடந்த கொடூர சம்பவம்… கோர விபத்தில் பறிபோன உயிர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாகராஜபுரத்தில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அவரது தங்கையின் கணவர் சதீஷ்குமாருடன் திருச்சி சாலையிலுள்ள குடிசை மாற்று வாரியத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் சந்தோஷ்குமார் ஓட்டிச் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி இருவரும் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி கீழே விழுந்தனர்.

அப்போது  லாரியின் சக்கரம் 2 பேர் மீதும் ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் பரிதாபமாக இறந்து விட்டார். மேலும் சந்தோஷ்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |