Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மே மாதம் முழுவதும்….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 26 ஆம் தேதி  முதல் பல கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் மே மாதம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு மணி நேர இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை விம்கோ நகர் முதல் விமான நிலையம் மெட்ரோ தளத்தில் ஒரு மணி நேர இடைவெளியிலும், சென்ட்ரல் – விமான நிலையம், சென்ட்ரல் – பரங்கிமலை தடத்தில் இரண்டு மணி நேர இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |