Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

யாரும் அங்க போக கூடாது… இருவருக்கு தொற்று உறுதி… அதிகாரிகளின் கண்காணிப்பு பணி..!!

ஒரே பகுதியில் வசிக்கும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அது தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கிலிருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களின்  மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மீண்டும் வாரம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அங்கு தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுக் வருகின்றது. அதுமட்டுமில்லாமல் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது வரை 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் 5 க்கும் மேற்பட்ட தனியார் மட்டும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிக்கு வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர்  வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் வங்கி மேலாளர் ஒருவருக்கும் அதே பகுதியில் வசிக்கும்  ஆடிட்டர் ஒருவருக்கும் கொரோனா  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு அதிகம் பரவாமல் இருக்க அந்தப் பகுதியை நகராட்சி நிர்வாகத்தினர் 14 நாட்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர் . மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வெளியே இருந்து உள்ளேயும், உள்ளே இருந்து வெளியும், வர முடியாதபடி தடுப்பு கம்பிகளை வைத்து அடைத்துள்ளனர். அதோடு அப்பகுதியில் பொதுமக்கள் யாரேனும் நுழைகின்றார்களா என்பதை கண்காணிப்பதற்கு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |